-1.6 C
New York
Saturday, December 21, 2024
spot_img

கோர விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

ஹயஸ் வாகனமும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் கம்பஹா மாவட்டம், மீரிகமை பிரதேசத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஓட்டோவில் பயணித்த நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த 38 வயதுடைய தந்தையும், 47 வயதுடைய ஓட்டோ சாரதியும் படுகாயங்களுடன் மீரிகமை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

27 வயதுடைய ஹயஸ் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles