தென்னிந்திய பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந் கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக நேற்று (28.12.2023) அதிகாலை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காலமானார்.
இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.