அமெரிக்காவிற்கு முதல்முறை அரசு முறைப் பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடி, ஐ.நா சபையின் தலைமை அலுவலகத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்றார். இன்று இரவு வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ படைன் அளிக்கும் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். இதற்கிடையில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு தலைவர்கள், தொழிலதிபர்கள், பல்துறை வல்லுநர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசி வருகிறார்.
3 நாள் சுற்றுப்பயணம் சென்ற மோடி
அந்த வகையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். முன்னதாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த எலான் மஸ்க், உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், உங்களை (எலான் மஸ்க்) சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எரிசக்தி முதல் ஆன்மீகம் வரை பல்வேறு விஷயங்களை ஆலோசித்தோம் எனப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர், எலான் மஸ்க் அளித்த பேட்டி பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் அதில் இந்தியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விஷயங்களும் அடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. அவர் பேசியதை இங்கே காணலாம்.