எமது இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய மாமணிகளை இனங்கண்டு மதிப்பளித்து, பாராட்டி, வாழ்த்தி ஏனையோர்க்கும் முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாகப் பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட வென்மேரி அறக்கட்டளையின் முதலாவது விருதுகள் வழங்கும் விழா கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஆவணி மாதம் ஆறாம் திகதி 2023ம் ஆண்டு (06/08/2023) வென்மேரி அறக்கட்டளையின் இரண்டாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெறுகின்றது. வென்மேரி அறக்கட்டளையின் மதிப்புமிக்க நிர்வாகக் குழுவினால் தேர்வு செய்யப்பட்ட இவ் ஆண்டிற்கான சாதனையாளர்களை அறிமுகம் செய்வதில் வென்மேரி அறக்கட்டளை பெருமை கொள்கின்றது.