22.9 C
New York
Wednesday, September 11, 2024
spot_img

ஒரே தினத்தில் வெளியாகும் கமலின் இரண்டு படங்கள்..அடேங்கப்பா..இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

உலகநாயகன் ஹாசன் தற்போது விறுவிறுப்பாக பல படங்களில் நடித்து வருகின்றார். இடையில் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் அரசியலில் கவனம் செலுத்தி வந்த கமல் தற்போது தன் ரசிகர்களுக்காக மீண்டும் சுறுசுறுப்பாக பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார்.

கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய கமல் அதைத்தொடர்ந்து ஷங்கரின் இந்தியன் 2, வினோத்தின் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னத்தின் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகின்றார்.

இதற்கெல்லாம் காரணம் விக்ரம் கொடுத்த வெற்றி தான் எனலாம். லோகேஷின் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலில் சாதனை படைத்தது கமலுக்கு புது உத்வேகத்தை கொடுத்தது. இதையடுத்து தற்போது கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படத்தை மீண்டும் தூசி தட்டி துவங்கியுள்ளார் கமல்ஹாசன்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டே இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியன் 2 திரைப்படம் அடுத்தாண்டு துவக்கத்தில் தான் வெளியாகும் என அறிவிப்புகள் வருகின்றன.இந்நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் சென்னை ஏர்போட்டில் நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து விறுவிறுப்பாக மீதமுள்ள காட்சிகளை படமாக்கிவிட்டு அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அப்படி பொங்கலுக்கு இந்தியன் 2 திரைப்படம் வெளியானால் ஒரே தினத்தில் கமல் நடித்த இரண்டு படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

அதாவது பிரபாஸின் நடிப்பில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் K படத்தில் உலகநாயகன் கமல் வில்லனாக நடிப்பதாக பேசப்பட்டு வந்தது. அதில் நடிக்க கமலுக்கு 150 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றது. மேலும் இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்படமும் இந்தியன் 2 படமும் ஒரே தினத்தில் வெளியாகஅதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Related Articles

Latest Articles