விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்க சிலர் முயற்சி செய்வார்கள் என பேசப்படுகிறது. இந்நிலையில் எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா என பாடியிருக்கிறார் விஜய். கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு. இந்த கத்தி வேற ரகம் வேணா ஸ்கெட்ச் எனக்கு, புரிதா உனக்கு என விஜய் பாடியிருப்பது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.தான் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் பிரச்சனை செய்வார்கள் என்பது விஜய்க்கு தெரியும். எல்லாத்துக்கும் துணிந்து தான் வருகிறார். எங்கள் அண்ணனை ஒன்னும் செய்ய முடியாது. 2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகப் போகிறார் விஜய்ணா. அதை யாராலும் தடுக்க முடியாது. திராவிட ஆட்சியை முடித்து வைக்கப் போகிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.