தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள மாரடைப்பானது ஏன் திங்கட்கிழமைகளில் ஏற்படுகின்றது. அதற்கான காரணத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மன அழுத்தம் அதிக அளவிலான நபர்களுக்குத் திங்கட்கிழமைகளில் தான் மாரடைப்பு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறையை முடித்துவிட்டு திங்கள்கிழமை பணிக்குச் செல்ல வேண்டுமே என்கிற அதீத மன அழுத்தம் தான் இதற்குக் காரணமாம்.
அதாவது, திங்கட்கிழமைகளில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதால் இரத்த அழுத்தமும், சர்க்கரையும் தானாக அதிகரிக்கிறது. இது இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் திடீர் மாரடைப்பு ஏற்படுவதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.