சுவிஸ் நாட்டை பொறுத்தவரையில் சுவிஸில் இயங்கும் அனைத்து தமிழ் பாடசாலைகளும் தனியார் பாடசாலைகளாகும். எனவே பாடசாலைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் என சுவிஸ் நாட்டின் பிரதான மொழிப்பெயர்ப்பாளரும்,சமூக செயற்பாட்டாளருமான முருகவேல் நந்தினி தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து – பேர்ண் வள்ளுவன் பள்ளி தைப்பொங்கல் சிறப்பாக நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பேர்ண் நகர முதல்வர் Alec von Graffenried முதன்மை விருந்தினராக பங்கேற்று விழாவினை தொடங்கி வைத்துள்ளதுடன்,தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த வ.மு.சே.திருவள்ளுவர் சிறப்பு விருந்தினராக தலைமை தாங்கியுள்ளார்.
இதன்போது சுவிஸ் நாட்டின் பிரதான மொழிப்பெயர்ப்பாளரும்,சமூக செயற்பாட்டாளருமான முருகவேல் நந்தினி சுவிட்சர்லாந்தில் ஈழ தமிழர்களுக்கு இடையே உள்ள சர்ச்சைகள் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்