16.1 C
New York
Sunday, September 8, 2024
spot_img

குண்டுவெடிப்புகளை அடுத்து ஏரிஎம்களை மூடும் சுவிஸ் வங்கிகள்.

நியூசெட்டல் பிராந்தியத்தில்  ஏரிஎம் குண்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, பிசிஎன் எனப்படும் நியூசெட்டல் கன்டோனல் வங்கி, அதன் ஏரிஎம்கள் மையங்கள் பலவற்றை மூடுவதாக அறிவித்துள்ளது.

நேற்று வரை, ஐந்து இடங்களில் பிசிஎன் ஏரிஎம் மையங்கள்,  சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதன்படி, Fleurier இல் உள்ள இரண்டு பிசிஎன்  ஏரிஎம்களின் செயல்பாடு மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் வங்கிக் கிளையில் உள்ள கவுண்டர்கள் தொடர்ந்து செயற்படும். காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை அதனைப் பயன்படுத்தலாம்.

Areuse (Centre de l’Ile), Cressier, Le Landeron (Migros) மற்றும் Neuchâtel (Monruz) ஆகிய இடங்களில் உள்ள ஏரிஎம்களும் தற்போது சேவையில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாத இறுதியில், பிசிஎன் வங்கி, La Chaux-de-Fonds இல் உள்ள Les Verrières, Les Ponts-de-Martel, Couvet மற்றும் Les Eplatures Est ஆகிய இடங்களில் உள்ள ஏரிஎம்களை மூடுவதாக அறிவித்திருந்தது.

La Brévine இல் உள்ள ஏரிஎம் இல் நடத்தப்பட்ட குண்டுத்  தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Alle மற்றும் Pruntrut JU இல் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜுராவின் கன்டோனல் வங்கியும் மே மாதம் பல ஏரிஎம்கள் மற்றும் கிளைகளை மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக அறிவித்தது.

கடந்த மே மாதத்தில் மட்டும், சுவிட்சர்லாந்தில் குறைந்தது ஏழு ஏடிஎம்கள் வெடித்துச் சிதறியுள்ளன.

La Brévine, Alle, Pruntrut மற்றும் Le Noirmont JU இல் நடந்த தாக்குதல்கள் தவிர,  Basel இல் உள்ள இரண்டு ஏரிஎம்களும்,  Eptingen இல் உள்ள ஒரு ஏரிஎம்மும் வெடிக்க வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில மூலம் – The swiss times

Related Articles

Latest Articles