மட்டக்களப்பு – தாளங்குடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.சிவமோகன் பயணித்த வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்ற காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் உள்ளிட்ட 3 பேர் நேற்று அதிகாலை பொத்துவில் அறுகம்பையில் இருந்து வவுனியா நோக்கி வாகனத்தில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் மருத்துவர் சிவமோகன் காயங்களின்றி உயிர்தப்பியுள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.