21.7 C
New York
Tuesday, April 29, 2025
spot_img

சுவிசில் திடீரென அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்கள்.

காலநிலை மாற்றத்தின் விளைவாக, ஐரோப்பாவில் டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் சுவிட்சர்லாந்திலும் டெங்கு தொற்றாளர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஐரோப்பாவில் டெங்கு நோய் பரவல் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் (ECDC) அறிவித்தது.

இந்த நிலையில், சுவிட்சர்லாந்தில் இதுவரை உள்ளூர் தொற்று பரிமாற்றங்கள் எதுவும் இல்லை என சுவிஸ் பொது சுகாதார மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆயினும், சுவிட்சர்லாந்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு தொற்றுகள் அனைத்தும் பயணத்துடன் தொடர்புபட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்டுக்குப் பின்னர்  சுவிட்சர்லாந்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 227 பேர் சுவிசில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுவிஸ் பொது சுகாதார மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் 74 பேரும், 2022 இல், அதே காலக்கட்டத்தில் 25 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles