-3 C
New York
Tuesday, February 24, 2026
spot_img

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாகப் போட்டி! – சிவாஜிலிங்கம் அறிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், நான் சுயேட்சைக்காக போட்டியிடுவேன் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.  

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை அறிவித்தார்.

“தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இம்முறை மக்கள் மத்தியிலும் பொது வேட்பாளர் விடயம் பேசப்படுகிறது. 

எனவே, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவார். அதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், நான் சுயேட்சையாக போட்டியிடுவேன்“ என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, சிவில் சமூகத்திற்கு மக்கள் ஆணையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கூறியிருப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட எம்.கே சிவாஜிலிங்கம்,

“அது தவறானது. மக்கள் தங்கள் பிரதிநிதியாகவே நாடளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளனர். 

ஆனாலும் மக்கள் தமக்கானதை தாமே தெரிவு செய்வார்கள். அவ்வாறு மக்களால் உருவானதே சிவில் சமூகம். அவர்களுக்கும் தமக்கு என்ன தேவை என்பதனை தீர்மானிக்கவும் அதனை கூறுவதற்கும் முடியும்” எனவும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles