நான்கு முக்கிய விடயங்கள் தொடர்பாக மக்களின் கருத்தை அறிய சுவிசில் இன்று வாக்களிப்பு இடம்பெறுகிறது.
சுகாதார காப்புறுதி மற்றும் சுகாதாரச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் இரண்டு முயற்சிகள் தொடர்பாகவும், எரிசக்தி கொள்கையில் சீர்திருத்தம் செய்வது மற்றும் தடுப்பூசி தேவைகளுக்கு எதிரான ஒரு முன்முயற்சி ஆகியன தொடர்பாகவும் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இவற்றில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவது சுகாதாரச் செலவுகள் குறித்த இரண்டு முக்கியமான முயற்சிகள் பற்றியதாகும்.
முதலாவது, சுகாதார காப்புறுதி தொகைகளின் சுமையைக் குறைக்கும் நோக்கம் கொண்டது; இது இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டது.
இரண்டாவது, சுகாதாரச் செலவுகளின் உயர்வைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனை மத்திய-வலது மையக் கட்சி சமர்ப்பித்திருந்தது.