-1.5 C
New York
Thursday, January 16, 2025
spot_img

சட்டவிரோத சிகரெட் விற்பனை; இராணுவ அதிகாரிகள் கைது

சட்டவிரோத சிகரெட் விற்பனையுடன் தொடர்புடைய இரண்டு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

ஹோமாகமவில் சட்டவிரோதமாக சிகரெட் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, ஒருவர் பனாகொட இராணுவ முகாமின் அதிகாரி எனவும் அதே தளத்தில் கடமையாற்றும் மற்றொருவருக்கு சிகரெட்டுக்களை வழங்க முற்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. 

கைதான சந்தேக நபர்கள் 43 மற்றும் 44 வயதுடையவர்கள் என்றும் நொச்சியாகம – மாரகஹவெவ மற்றும் நிட்டம்புவ – கல்எலிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

அத்தோடு, சந்தேக நபர்களிடமிருந்து 600 சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள் இருவரும் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

Related Articles

Latest Articles