சென் பேனாட் கழக போட்டியில் பங்கேற்பதற்காக உலகின் 17 நாடுகளில் இருந்து 150 நாய்களை சுவிசின் கன்டோன் வலாய்சுக்கு வந்துள்ளன.
மலை நாய் வகையான சென் பேனாட் நாய்களை வளர்ப்பவர்களின் கழகங்களின் உலக ஒன்றியத்தின் போட்டியானது சுமார் இருபது நாடுகளை ஒன்றிணைக்கிறது.
முக்கியமாக ஐரோப்பா மற்றும் தென்னாபிரிக்கா, போன்ற நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
இந்த போட்டி ஒவ்வொரு ஆண்டும் உறுப்பு நாடுகளில் ஒன்றில் நடைபெறும்.
சுவிஸ் இனத்தின் தரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தப் போட்டி நடத்தப்படுவதாக சென் பேனாட் நாய்வளர்ப்பவர் ஒருவர் தெரிவித்தார்.
சென் பேனாட் ஒரு மலை நாய், வோல்ட் டிஸ்னி வகை நாய் அல்ல, டெடிபியர் போல உருண்டையாகவும் உரோமத்தையும் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆங்கில மூலம் -swissinfo.ch