சுகாதார காப்புறுதி தொகைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் கூடுதல் தகவல்களை பெறுவது தொடர்பாக, கன்டோன்களுக்கு விரைவில் மேலதிக அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
சுகாதார காப்புறுதி கண்காணிப்பு சட்டத்தை திருத்துவதில் கவனம் செலுத்தும் சமஸ்டி பேரவை, இந்த மாற்றத்தை செயற்படுத்த நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளது.
தற்போது, மதிப்பிடப்பட்ட செலவுகள் குறித்து மட்டுமே கன்டோன்கள் கருத்து தெரிவிக்க முடியும்.
எனினும், அவர்களின் பகுதியில் உள்ள சுகாதார காப்புறுதி தொகை குறித்து கருத்து தெரிவிக்க புதிய சட்டம் அனுமதிக்கும்.
குறிப்பாக, காப்புறுதியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட சுகாதார செலவு மதிப்பீடுகள் மற்றும் தொகை முன்மொழிவுகளை கன்டோன்கள் மதிப்பீடு செய்ய முடியும்.
தேவையான அனைத்து தகவல்களையும் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
ஆங்கில மூலம் – theswisstimes.ch