-10.4 C
New York
Monday, December 23, 2024
spot_img

போதைக்கு அடிமையானவர்களை மீட்க புதிய புனர்வாழ்வு மையங்கள்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை, மீட்பதற்கான புதிய புனர்வாழ்வு மையங்களை சுவிஸ் அரசு அமைக்கவுள்ளது.

முறியடிப்பு நிலைமை குறித்து நகரங்கள், கன்டோன் மற்றும் சிறப்பு நிறுவனங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நேற்று இதுபற்றி அறிவிக்கப்பட்டது.

தற்போது இவ்வாறான  மையங்கள் இல்லாத பகுதிகளில் இதனை அமைக்கவுள்ளதாக பொது சுகாதார சமஷ்டி பணியகம் தெரிவித்துள்ளது.

போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உளவியல் மற்றும் மருத்துவ ஆதரவு சேவைகளின் வலையமைப்பின் மூலம் ஆரம்ப கட்டத்தில் உதவ  முடியும் என்பதை இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள்,  ஒப்புக்கொண்டனர்.

சுவிட்சர்லாந்தில் கஞ்சாவிற்கு அடுத்ததாக கோகோயின் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் போதைப்பொருளாக இருப்பதாக சமஷ்டி புள்ளிவிபரவியல் பணியகம் தெரிவிக்கிறது.

 2022 ஆம் ஆண்டில், 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களில் 6.2% பேர் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கோகோயின் பயன்படுத்தியதாக கூறியுள்ளனர்.

ஆங்கில மூலம் – swissinfo.ch

Related Articles

Latest Articles