32.2 C
New York
Tuesday, July 1, 2025
spot_img

வடக்கு மாணவர்களே அதிகளவில் பல்கலைக்கழங்களுக்கு தகுதி.

கடந்த முறை கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 64.3 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

கடந்த ஜனவரியில் நடந்த க.பொ.த உயர் தர பரீட்சையில் 269,613 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 173,444 பேர் பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் இருந்தே அதிகளவு மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles