-2.6 C
New York
Thursday, January 16, 2025
spot_img

குருநகர் சேமக்காலையில் பெண் பெற்றோல் ஊற்றி எரித்துக் கொலை.

யாழ்ப்பாணம்- குருநகரில் நேற்று மாலை பெண் ஒருவரை சவக்காலைக்கு அழைத்து வந்து ஆண், அவரது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டிக் கொலை செய்துள்ளார்.

45 வயதுடைய பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ். குருநகர் கொஞ்சேஞ்சி மாதா சவக்காலைப் பகுதிக்கு நேற்றுப் பிற்பகல் அழைத்து வந்தார்.

அங்கு இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் மேற்படி ஆண், பெண்ணின் தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டினார்.

பெண் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அந்தப் பெண் நேற்று இரவு உயிரிழந்தார்.

இரத்தினவடிவேல் பவானி (வயது 45) என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டவராவார். அவரது அடையாள அட்டை, பை உள்ளிட்ட சில பொருட்கள், சம்பவ இடத்தில் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் என்ன தொடர்பு, ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Articles

Latest Articles