ஜெர்மனியில் பொதுமக்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய இளைஞரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர்.
ஜெர்மனியின் தென்மேற்கில் அமைந்துள்ள மன்ஹெய்ம் நகரின் மையப்பகுதியில் மார்க்பிளாட்ஸ் சதுக்கத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மர்ம நபர் ஒருவர் கண்ணில் கண்டவர்களையெல்லாம் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இச்சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த பொலிசாார் அங்கு வந்து இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.