-5.4 C
New York
Friday, January 16, 2026
spot_img

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு

தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று இடம்பெற்றது. 

யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் யாழ் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சிவகரன் அனுசியா ,நூலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது நூலகம் எரிக்கப்பட்டபோதும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தென்கிழக்காசியாவின் மிக பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி காடையர்களால் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles