கடலிலிருந்து கொழும்பு துறைமுகம் ஊடாக நாட்டுக்குள் எரிபொருளை செலுத்தும் எரிபொருள் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்குரிய இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையங்களின் கீழுள்ள எரிபொருள் குழாயிலேயே இவ்வாறு கசிவு ஏற்பட்டுள்ளது.
சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளதாக இலங்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கடலில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் கலந்துள்ளதாகவும், குழாயின் நிலப்பகுதியில் இன்னமும் கசிவு தொடர்வதனால் எரிபொருளை பெரிய தாங்கிகள் மூலம் அப்புறப்படுத்துவதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது