24.8 C
New York
Monday, September 15, 2025
spot_img

2000 ஆயிரம் பேரை காவுகொண்டது மண்சரிவு!

பபுவா நியூகினியாவில் வெள்ளிக்கிழமைஅதிகாலை, ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 2000 பேர் வரை உயிருடன் புதையுண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாலை சுமார் 3 மணியளவில் மக்கள் அமைதியாக உறங்கி கொண்டிருந்த போது எதிர்பாராத இந்த மண்சரிவினால் 6 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

நூற்றுக்கணக்கான வீடுகள், நிலச்சரிவுக்குள் சிக்கியுள்ளன. இந்த மண்சரிவில் சிக்கி சுமார் 670க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மண்சரிவில் 2,000 க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக பபுவா நியூகினியா பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. 

மீட்பு படையினரின் வருகை தாமதமாவதால், உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

வீடுகள் 8 மீட்டர் ஆழத்தில் புதைந்துள்ளதால் எங்கு மக்கள் புதைந்திருக்கிறார்கள் என்று தெரியாமல் மக்கள் எல்லா இடங்களிலும் தோண்ட ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Latest Articles