3 C
New York
Tuesday, December 3, 2024
spot_img

இறந்துபோன குட்டியை 3 மாதங்களாக சுமந்து திரியும் சிம்பன்சி!

ஸ்பெயினில் அமைந்துள்ள பயோபார்க் உயிரியல் பூங்காவில், சிம்பன்சி குரங்கு ஒன்று, இறந்து போன தனது குட்டியை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சுமந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடாலியா என்ற அந்த சிம்பன்சி குரங்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. பிறந்த சில நாட்களில் அந்த குட்டி இறந்துள்ளது. இருந்தும் அதனை விட்டுப் பிரிய மனம் இல்லாத நடாலியா, அப்போது முதலே அதை தன்னோடு வைத்துக் கொண்டுள்ளது.

இது சிம்பன்சி குரங்குகளின் வழக்கமான நடவடிக்கை என்றும், மிருகக் காட்சி சாலை என்று மட்டுமல்லாமல் அடர் வனப் பகுதிகளில் வசித்து வரும் சிம்பன்சி மத்தியிலும் இந்த நடத்தையை பார்க்க முடியும் என்றும் பயோபார்க்கின் உயிரியல் பூங்காவின் தலைவர் மிகுவல் காஸரேஸ் தெரிவித்துள்ளார்.

அதன் இழப்புக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மனிதர்களைப் போலவே சிம்பன்சி குரங்குகளும் தங்களுக்கு நெருக்கமானவர்களின் மரணத்துக்கு வருந்தும். என்ன அந்த செயல்முறை மிகவும் நீண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் உயிரியல் பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்கள், இறந்து போன குட்டியுடன் நடாலியா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதற்கான காரணத்தை அவர்களிடத்தில் நாங்கள் விளக்கினோம். மேலும், அது எங்களது கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிப்போம்” என காஸரேஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles