28.6 C
New York
Tuesday, July 1, 2025
spot_img

சுன்னாகத்தில் கைநீட்டிய கனடா வாசிகள் கம்பி எண்ணுகின்றனர்!

யாழ்ப்பாணம்- சுன்னாகம் பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டுக்குள் கடந்த திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் , சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து ,விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர்கள் என்பதும் , கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கனடா வாசிகள் இருவரும், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Latest Articles