26.2 C
New York
Saturday, July 12, 2025
spot_img

மின்கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – இளம் குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம் – அளவெட்டிப் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில், இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த தியாகராஜா தயா ( வயது 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.

அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles