நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டும் பணி கடந்த பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்ட நிதி திரட்ட நிகழ்ச்சிகளும், கிரிக்கெட் போட்டிகளும் சில வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.
சமீபத்தில் நடிகர் சங்க கட்டிடத்திற்காக கமல் ஒரு கோடி கொடுத்து இருந்தார். விஜய்யும் ஒரு கோடி ருபாய் கொடுத்து இருந்தார்.
அதனை தொடர்ந்து கட்டிட பணிகள் சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 50 லட்சம் ரூபாயை நடிகர் சங்கத்திற்கு நன்கொடையாக கொடுத்து இருக்கிறார்.
நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் இதற்கான காசோலையை சிவகார்த்திகேயன் வழங்கி இருக்கிறார்.