அமெரிக்காவில் சரக்கு விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலுள்ள பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் புறப்பட்ட சரக்கு விமானமே இவ்வாறு கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் புறப்பட்டு 11 கிலோமீற்றர் தூரம் பயணித்த நிலையிலேயே கீழே விழுந்து தீப்பற்றியெரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.