12.4 C
New York
Sunday, March 23, 2025
spot_img

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஈரானுக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

ஈரானுக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக மத்தல சர்வதேச விமான நிலையத்தை ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் வந்தடைந்துள்ளனர். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைசாத்திடப்படவுள்ளது.

அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகைதந்துள்ள ஈரான் ஜனாதிபதி, அங்கிருந்து உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித்திட்டத்தை திறந்துவைத்துவிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கொழும்பை வந்தடையவுள்ளார்.

Related Articles

Latest Articles