பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட தொழில்நுட்பக் கண்காட்சியொன்றிற்காக மாணவர்களால் உருவாக்கப்பட்ட சிறிய வாகனமொன்றைச் செலுத்த முற்பட்ட இரு மாணவர்கள் விபத்தில் சிக்கிக் காயமடைந்து பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு மாணவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் மற்றைய மாணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.