இலங்கையின் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் தெரிவித்துள்ளார் .
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுக்கும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி அலுவலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் வேலைத்திட்டத்தின் நிதி மற்றும் நிர்வாகத் தேவைகளை நிறைவு செய்தல் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான எதிர்கால ஒத்துழைப்பு போன்ற இருதரப்பு விடயங்கள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது .