போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கும் நீதிமன்ற உத்தரவும் அமுலில் உள்ளது.
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று காலை மலேசியாவின் கோலாலம்பூருக்கு செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது .