இலங்கையில் சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்ற 550 பேருக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது , இந்த நிலையில், அதற்கான ஆட்சேர்ப்பானது, வெளிப்படைத்தன்மையின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இவ்விடயத்தில் சுகாதார அமைச்சு தகவல்களை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல், மௌனத்தை கடைப்பிடிக்கிறது.
ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் முயற்சிகளையடுத்து, இலங்கையின் சுகாதாரத்துறையில் உள்ள 550 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கமைய, சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்ற 250 தாதியர்கள், 100 இரசாயன பரிசோதகர்கள், 200 தாதிய உதவியாளர்கள் ஆகியோருக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .