பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
ஆகையால் , ஏனைய வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகள் காரணமாக அவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றன.
இம்ரான் கானுக்கும் புஷ்ரா பீபிக்கும் 14 வருட சிறைத்தண்டனை விதித்து இஸ்லாமாபாத் பொறுப்புடைமை நீதிமன்றம் ஜனவரி 31 ஆம் திகதி தீர்ப்பளித்தது. இவர்கள் தலா 10 வருட காலம் அரச பதவிகளை வகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் இருவருக்கும் தலா 787 மில்லியன் பாகிஸ்தான் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .