தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கலந்துகொண்ட ஈழத்து குயில் கில்மிஷா முதல் பரிசை வென்றார்.
இவ்வாறான நிலையில், தென்னிந்திய திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஈழத்து குயில் கில்மிஷா தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மக்களின் வரவேற்பானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஆதரவளித்த சகோதர மொழி மக்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கான அழைப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.