20.3 C
New York
Saturday, July 27, 2024
spot_img

மது போதையில் அட்டகாசம் செய்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர்

மட்டக்களப்பு நகரில் மதுபோதையில் மனைவி, மகனை தாக்கிய கணவருக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற மனைவி, மகனை ம்போதையில் சென்று அட்டச்காசம் செய்த உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரதேச செயலகம் ஒன்றில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை மதுபோதையில் நேற்று (21) கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவி மகன் மீது தாக்குதல்

குறித்த நபர் சம்பவதினமான நேற்று (21) மதுபோதையில் மனைவி மகன் மீது தாக்கியதை அடுத்து அங்கிருந்து தப்பிய அவர்கள், பொலிஸ் நிலையம் போவதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்துக்கு சென்றனர்.

இந்நிலையில் அவர்களை பின் தொடர்ந்து பொலிஸ் நிலையத்துக்குள் சென்று அங்கு பெரும் அட்டாகாசம் செய்த உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்தனர். கைதானவரை வைத்தியசாலையில் அனுமதித்து மதுபோதை பாவித்தாரா என உறுதிபடுத்தப்பட்டது.

பின்னர் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டகோவை 1979 ஆம் ஆண்டு 4 ஆம் பிரிவின் கீழ் மதுபோதையில் பொலிஸ் நிலையத்தில் கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று (21) மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது சந்தேக நபருக்கு 2,500 ரூபா அபதாரம் செலுத்துமாறும் 25,000 ரூபா கொண்ட ஒரு வருட நன்னடத்தை பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related Articles

Latest Articles