போர் தொடங்கியதில் இருந்து 175,000 க்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் கனடாவிற்கு வந்துள்ளனர் மற்றும் கனடா உக்ரைனுக்கு ஆதரவாக 6.1பில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது.
ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான உக்ரைனின் போருக்கு மேற்கத்திய நட்பு நாடுகளின் ஆதரவை வலுப்படுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று வெள்ளிக்கிழமை கனடிய நாடாளுமன்றத்தில் பேசுவார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் வாஷிங்டனில் உள்ள சட்டமியற்றுபவர்களுடனான சந்திப்புகளுக்குப் பிறகு திடீர் விஜயம் ஒன்றிற்காக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று வியாழன் பிற்பகுதியில் கனடாவின் தலைநகருக்கு ஒட்டாவுக்குச் சென்றார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுக் கூட்டத்தில் அவர் நேற்று முன்தினம் புதன்கிழமை பேசினார்.