3 C
New York
Tuesday, December 3, 2024
spot_img

இலங்கையில் வளர்ந்து வரும் சினிமாத்துறையில் மீண்டும் ஒரு படைப்பு !

நாட்டில் பல வருட யுத்தத்தின் பின் பல்வேறு துறைகளில் ,இலங்கை தமிழ் மக்கள் சாதித்துகொண்டு வருகின்றனர்.

அது போல் சினிமாதுறையிலும் அதிகளவானோர் ஆர்வமுடன் சாதிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கண்டியிலிருந்து தனது சொந்த முயற்சியால் ,ரு குயில்கள் தமிழ்நாட்டுக்கு சென்று உலக தமிழ்மக்களின் நெஞ்சங்களில் ,டம்பிடித்துள்ளது நாம் அறிந்தவையே

அந்த வரிசையில் கொழும்பில் உள்ள திரைப்படக் கலைஞர்கள் தனது சொந்த முயற்சியில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட காத்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் பெயர் ‘ சொப்பண சுந்தரி” எனவும் ,தை மாதவன் மகேஸ்வரன் என்பவர் இயக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இத்திரைப்படமானது ,ந்த மாதம் 25ம் திகதி திறைக்கு வெளிவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படத்தை செதுக்கிய சிற்பிகளின் விபரங்கள் !

கதை திரைக்கதை – ஜோயல்

ஒளிப்பதிவு – சமல் விக்ரமசிங்க

இசை – ஜீவானந்தம் ராம்

பாடல் வரிகள் – வருன் துஷ்யந்தன்

நடிகர்கள் – நிரஞ்சனி சண்முகராஜா,‌ பேர்லிஜா ஜெயராஜா, கஜானன், நரேஷ் நாகேந்திரன், ஜோயல், வருன் துஷ்யந்தன், தனுஷ், சஞ்சய், ரவி, ரெஜினோல்ட், மெய்லிஸா, ஜெனோசன்
உதவி இயக்குநர்கள் – நரேஷ் நாகேந்திரன், ஜோயல்

Related Articles

Latest Articles