26.3 C
New York
Monday, September 15, 2025
spot_img

யாழ். ஆனக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத விசமிகளால் ஏழு சொரூபங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

ஆனைக்கோட்டை பகுதியில்  நேற்று(28.07.2023) இரவு  ஆனைக்கோட்டை சந்தியில் ஒரு சொரூபமமும், ஆனைக்கோட்டை சந்திக்கு அருகாமையில் ஒரு சொரூபமும், ஆனைக்கோட்டை கராஜ்ஜடியில் ஒரு சொரூபமும், அடைக்லமாதா தேவாலயத்தை சுற்றி 3 சொரூபங்களும் மற்றும் ஆனைக்கோட்டை குடிமனைகளுக்கு மத்தியில் உள்ள ஒரு சொரூபமும் உடைக்கப்பட்டுள்ளன.

இதில் சில இடங்களில் சொரூபங்கள் உடைத்து செல்லப்பட்டுள்ளன. சில இடங்களில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

தீவிர விசாரணை

இந்நிலையில் சி.சி.ரி.வி காட்சிகளை அடிப்படையாக வைத்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் இது குறித்து தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles