-7.7 C
New York
Sunday, December 22, 2024
spot_img

ஊசி செலுத்தப்பட்டதன் பின் இளம் பெண் உயிரிழப்பு, காரணம் இதுதானாம்! தாதியர் சங்கம் விளக்கம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து இலங்கை தாதியர் சங்கம் விளக்கமளித்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்துபிட்டிய அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஊசி போட்ட பின்னரே அவர் இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் அகில இலங்கை தாதியர் சங்கம் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி உயிரிழந்த சாமோதிக்கு வழங்கப்பட்ட ஊசி மருந்து தொடர்பாக விளக்கமளித்தது.

அங்கு உரையாற்றிய அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த, இதில் 10 மில்லி மருந்தை கரைத்து நோயாளிக்கு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, ​​நாட்டின் மருத்துவமனை அமைப்பில் தேவையான 10 மில்லி சிரிஞ்சர்கள் இல்லை. 

ஆனால் இந்த தாதியர் அந்த மருந்தை இரண்டு 5சிசி சிரிஞ்சர்களில் கரைத்து கொடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட சிக்கலால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.

Related Articles

Latest Articles