-6.7 C
New York
Sunday, December 22, 2024
spot_img

கடைசியில் கடற்புலிகள் கப்பலே துணை!

தமிழ் நாட்டின் நாகப்பட்டின துறைமுகத்தில் உள்ள கடற்; புலிகளின் கப்பல்களைப் பயன்படுத்தி இலங்கை இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் எந்த நேரத்திலும் படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் ஆனால் இந்தியா அனுமதி வழங்காததால்தான் சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர்; குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் எங்களுக்கு படகு சேவை வேண்டும்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் பிற வசதிகளை நாங்கள் அமைத்துள்ளோம். இந்தியாவுடன் எங்களுக்கு கிடைத்த சமீபத்திய தகவல்களின்படி, அவர்கள் படகு சேவையை மாத்திரமே ஆரம்பிக்க முடியும் என கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் தமிழ் நாட்டின் நாகப்பட்டின துறைமுகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கப்பல்களைப் பயன்படுத்தி இலங்கை இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி  தெரிவித்துள்ளார்

Related Articles

Latest Articles