முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பாக உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இதில் காணாமல் போனவரின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப புதைகுழி தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் இவர்கள் தாங்கியிருந்தனர்.