23.2 C
New York
Sunday, July 13, 2025
spot_img

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மேலும் 3 பேர் கைது!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 25 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 6 பேரை எதிர்வரும் ஜூலை 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.

பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜுன் மாதம் 28ம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், 

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரால், அமைதியின்மையை கட்டுப்படுத்த வானைநோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 3 சந்தேகநபர்கள் கைது செய்யபட்டனர்.

நீர்வேலி மற்றும் மடத்தடி பகுதிகளைச் சேர்ந்த 20, 25, மற்றும் 28 வயதுடைய 3 சந்தேகநபர்களே நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles