மறைந்த ஊடகவியலாளர் நிமலராஜனின் தந்தையார் கணபதிப்பிள்ளை மயில்வாகனம் இயற்கை எய்தியுள்ளார்.நிமலராஜனின் படுகொலையினையடுத்து புலம்பெயர்ந்து கனடா நாட்டினில் வாழ்ந்து வந்திருந்த நிலையில் கணபதிப்பிள்ளை மயில்வாகனம் இயற்கை எய்தியுள்ளார்.
அவரது மனைவியார் 2021ம் ஆண்டில் இயற்கை எய்திய நிலையில் தற்போது கொல்லப்பட்ட தனது மகனான நிமலராஜனிற்கான நீதி கிட்டாத நிலையில் கணபதிப்பிள்ளை மயில்வாகனம் இயற்கை எய்தியுள்ளார்.
கணபதிப்பிள்ளை மயில்வாகனம் அவர்களிற்கு நிமலராஜன் மட்டும் ஒரு ஆண்மகனாக இருந்த போதும் நான்கு மக்கள் அவருடன் கனடாவில் வாழ்ந்துவருகின்றனர்.