9.7 C
New York
Sunday, December 3, 2023
spot_img

பிரான்சில் 3வது நாளாகத் தொடரும் போராட்டங்கள் 667 பேர் கைது!

கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் மகிழுந்தில் பயணித்த 17 வயது இளைஞன் போக்குவரத்து காவல்துறையினரால் வீதியில் மறிக்கப்பட்ட போது மகிழுந்தை இளைஞன் நிறுத்தாததால் காவல்துறையினர் அவரை சுட்டுக்கொன்றனர். 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறையின் இந்த செயலுக்கு எதிராக வீதியில் இறங்கி நீதி கேட்டுப் போராடத்தைத் தொடங்கினர். பின்னர் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் வெடித்தன.

குறித்த போராட்டம் மூன்றாவது இரவாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 667 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்நிரவு மட்டும் 100க்கு மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.

தொடரும் கலவரத்தில் அமைதியின்மைக்குப் பிறகு 249 காவல்துறையினர் அதிகாரிகள் காயமடைந்ததாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles