9.7 C
New York
Sunday, December 3, 2023
spot_img

வீதி விபத்தில் இரு சகோதர்கள் பரிதாப மரணம்!

அம்பாந்தோட்டை வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பிரதேசத்தில் இன்று (24) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள்

சந்தையில் மரக்கறி வாங்க வீதியில் நடந்து சென்ற சகோதரர்கள் இருவர் மீது பின்னால் வேகமாக வந்த லொறி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

14 வயதுடைய எம். தரங்க என்ற சகோதரன் சம்பவ இடத்திலும், 20 வயதுடைய எம்.டில்ஷிகா என்ற சகோதரி வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles