(hey fever) கோடை காலம் வந்து விட்டால் ,
பலரையும் சிரமப்படுத்தும் ஒன்றாகும்.
தும்மல், இருமல், மூக்கால் வடிதல், கண்ணில் நீர் வடிதல், கண் எரிவு ,தலையிடி போன்ற பல பிரச்சினைகள் தலைதூக்கி விடும்.
மார்ச் மாத இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை, இவ்வகை பிரச்சினைகளால் பலர் சிரமப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இக் காலங்களில், வெப்பம் மற்றும் காற்று போன்றவற்றால் , மகரந்தம்( pollen) மற்றும்
தூசி அதிகமாக சூழல்களில் காணப்படுகின்றன.
இவ் வருடம், சென்ற காலங்களை விட பல மடங்கு அதிகம் பேரை, இந்த தாக்கம் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.
இப் பிரச்சினைக்கு மருத்துவ ரீதியாக தீர்வுகள் இல்லாவிடினும், பாதுகாக்க சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன .
@ இக் காலங்களில் வெளியில் சென்று
வந்தவுடன் , உடுப்புகளை மாற்றி
குளித்தல் நல்லது
@ மூக்கு துவாரம் மற்றும் மூக்கை சுற்றி
பெட்ரோலிய ஜெலி கிரீம் பூசுதல்
நன்மை தரும்.
@ இக் காலங்களில் வீட்டு கதவு ஜன்னல்
பூட்டி வைத்திருத்தல்
@ புற்கள் வெட்டும் இடங்களில்
செல்வதை தவிர்ப்பது மற்றும்
பூக்களை நுகர்ந்து பார்ப்பதை
தவிர்த்தல்.
மேற்கண்ட முறைகளை பின்பற்றுதல் மூலம் ஓரளவு நிம்மதியாக ,கோடை கால வசந்தத்தை அனுபவிக்க முடியும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது