விஜய், அஜித், கமல், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மறுத்ததால் பட வாய்ப்புகள், கைநழுவியதாக சீரியல் நடிகை ஒருவர் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சமீப காலமாகவே தென்னிந்திய திரையுலகில், மீடு மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த பிரச்சனைகள் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகைகள் சிலர் தானாகவே முன்வந்து தாங்கள் எதிர்கொண்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளை வெளிப்படையாக தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.