உக்ரைன் அமைதி மாநாடு சுவிசின் பேர்கன்ஸ்டொக் நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர், ரஷ்யாவின் இணையத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிசின் Dreamlab Technologies என்ற புலனாய்வு பாதுகாப்பு நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, ஏப்ரல் மாதத்தில் 1,600 இணையத் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மே மாதத்தில் 4,600 க்கும் அதிகமான இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்படடிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் சுவிட்சர்லாந்தை முழுமையாக உள்ளடக்கியதாக இல்லை என்றாலும், இது அதிகரித்து வரும் பதற்றத்தை எடுத்துக் காட்டுகிறது.
இதையடுத்து, தொலைத்தொடர்பு, பொது போக்குவரத்து மற்றும் எரிசக்தி போன்ற முக்கியமான துறைகளில் உள்ள முக்கிய நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப பூட்டுதலை அமுல்படுத்தியுள்ளன.
ஆங்கில மூலம் – NZZ am Sonntag