வெளிநாட்டவர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்குவதற்கு எதிராக ஜெனிவாவில் உள்ள வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இடதுசாரிகளின் சார்பில், “இங்கே ஒரு வாழ்க்கை, இங்கே ஒரு வாக்கு”என்ற யோசனையின் அடிப்படையில் நேற்று ஜெனிவாவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் 46 வீதமான வாக்காளர்கள் வாக்களித்திருந்த நிலையில், 61 வீதமானோர் இந்த முயற்சிளை நிராகரித்துள்ளனர்.
ஜெனிவாவில் வசிக்கும், சுவிட்சர்லாந்தில் குறைந்தது எட்டு ஆண்டுகள் வாழ்ந்த வெளிநாட்டவர்களுக்கு, நகராட்சி மற்றும் கன்டோன் அளவில் முழு அரசியல் உரிமைகளை வழங்கும் நோக்கில் இந்த அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டது.
இது, வெளிநாட்டவர்களுக்கு நகராட்சி மட்டத்தில் தேர்தலில் நிற்கும் உரிமையை வழங்குவதுடன், சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக கன்டோன் அளவில் வாக்களிக்கும் மற்றும் தேர்தலில் நிற்கும் உரிமையையும் வழங்கும் வகையிலான திருத்தங்களை உள்ளடக்கியிருந்தது.
ஆங்கில மூலம்- swissinfo